/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மரக்கிளையால் அறுந்து விழுந்த மின்கம்பியால் போக்குவரத்து பாதிப்பு
/
மரக்கிளையால் அறுந்து விழுந்த மின்கம்பியால் போக்குவரத்து பாதிப்பு
மரக்கிளையால் அறுந்து விழுந்த மின்கம்பியால் போக்குவரத்து பாதிப்பு
மரக்கிளையால் அறுந்து விழுந்த மின்கம்பியால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 02, 2024 02:49 AM
காங்கேயம்: காங்கேயத்தில், திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில், அகிலாண்டபுரம் மற்றும் அய்யாசாமி நகர், காலனிபிரிவு நால்ரோடு அருகே, 50 ஆண்டுகளான வேப்பமரம் உள்ளது. வளர்ந்த மரத்தின் கிளைகள் சாலையின் குறுக்கே நீட்டிக் கொண்டிருந்தன.
சாலையில் செல்லும் பஸ்கள், லாரிகள் மற்றும் கனரக வாகனங்களின் மீது மோதி கொண்டிருந்தது. நேற்று அதிகாலை கிளையின் மீது ஒரு சரக்கு லாரியின் மேற்கூரை சிக்கியது. இதில், 10 அடி நீள வேப்பமரக்கிளை முறிந்து கடைகளின் மீதும், அவ்வழியாக செல்லும் மின்கம்பிகளின் மீதும் விழுந்தது. இதில் மின்
கம்பிகளில் தீப்பொறி ஏற்பட்டு அறுந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக அப்போது எந்த வாகனமும் செல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.போக்குவரத்து போலீசார் காங்கேயம் மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து, முறிந்து விழுந்த மரக்கிளையை அப்புறப்படுத்தி, மின் கம்பிகளை சரி செய்தனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. சிறிது
நேரத்துக்குப் பிறகு இருவழி சாலையில் ஒரு வழி அடைக்கப்பட்டு, ஒரு வழியில் வாகனங்கள் விடப்பட்டன. மரத்தை அகற்றிய பிறகு, மற்றொரு வழியில் போக்குவரத்து தொடங்கியது.