ADDED : பிப் 22, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு வீரப்பம்பாளையம், யூ.ஆர்.சி., நகரை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன், 44; எம்.வி.டி., பெயரில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்தார்.
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடன் பெற்று செலுத்த முடியாமல் சிரமப்பட்டார். கடந்த, 20ல் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி சுதா புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.