/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறித்த இருவர் கைது
/
ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறித்த இருவர் கைது
ADDED : ஜூலை 02, 2024 07:25 AM
ஈரோடு: சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்த ரயில்களில் கடந்த மாதம், 13ம் தேதி- நள்ளிரவில், மூன்று பெண்களிடம் மர்ம ஆசா-மிகள் நகை பறித்து தப்பினர். ஆசாமிகளை பிடிக்க ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா சாய்ஸ்ரீ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மொபைல்போன் சிக்னல், கண்-காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்-தப்பட்டது.
இதன் அடிப்படையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சஞ்சுராய், 32, தீப்ஜோதி, 28, என இருவரை, சென்னை மற்றும் ஆந்திராவில், போலீசார் நேற்று கைது செய்தனர். ரயிலில் பயணித்து, பய-ணிகள் அசந்து துாங்கும் வேளையில் நகை பறித்து, ரயில் மெது-வாக செல்லும் போது குதித்து தப்பியது தெரிய வந்தது.
இருவரிடமும் இருந்து இரண்டரை பவுன் நகை மீட்கப்பட்டது. இருவர் மீதும் ஜோலார்பேட்டை உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.