ADDED : ஆக 26, 2024 08:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு துறை ஊர்தி ஓட்டுனர் சங்கத்தில், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் சண்முகம், நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநில சங்க தேர்தலில் பங்கெடுப்பது, மாவட்ட சங்க கட்டடத்-துக்கு இடம் தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
அரசு ஓட்டுனர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2009 மே 31 கிரேடு பே மாற்றம் செய்ய வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு ஓட்டுனர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.

