/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெண்டிமலை பெருமாள் கோவில் நிலம் அளவீடு
/
வெண்டிமலை பெருமாள் கோவில் நிலம் அளவீடு
ADDED : ஜூலை 02, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி : பவானியை அடுத்த புன்னம் பஞ்., வெண்டிமலை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம், அளவீடு செய்யப்பட்டு எல்-லைக்கற்கள் நடப்பட்டன.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்-டுப்பாட்டில் உள்ள இக்கோவிலின், 33 ஏக்கர் புன்செய் நிலம், புன்னம் பஞ்சாயத்தில் உள்ளது. ரோவர் கருவி மூலம் தனி தாசில்தார் சங்கர் கணேஷ் தலைமையிலான குழுவினர் அளவீடு செய்தனர். தொடர்ந்து நில உரிமையை பாதுகாக்கும் வகையில் எல்லைக் கல் நடப்பட்டது.