/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாய்க்காலில் நீர் கசிவு அணையில் தண்ணீர் நிறுத்தம்
/
வாய்க்காலில் நீர் கசிவு அணையில் தண்ணீர் நிறுத்தம்
ADDED : ஆக 20, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில், 15ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெருந்துறை ஒன்றியம் நல்லாம்பட்டி, சாராயக்காரன் தோட்டம் பகுதியில் செல்லும் வாய்க்காலில், நேற்று மாலை சிறு அளவில் நீர் கசிவு ஏற்பட்டது. தகவலறிந்து நீர்வளத் துறை அதிகாரிகள் சென்றனர். நீர் கசிவை சரி செய்ய முடியவில்லை. இதனால் இரவு ௧௦:40 மணியளவில் பவானிசாகர் அணையில் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

