ADDED : ஜூலை 17, 2011 02:22 AM
ஈரோடு: ராகிங் கொடுமையில் இருந்து விடுபட ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில்
நேற்று முதல் கண்காணிப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது.கல்வி நிறுவனங்களில்
ராகிங் கொடுமையை ஒழிக்கும் பொருட்டு, மாநில அளவிலான 'ராகிங் கண்காணிப்பு
பிரிவு' அமைக்கப்பட்டுள்ளது.
அதனொரு பகுதியாக ஈரோடு மாவட்டத்திலும்,
எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று முதல் இப்பிரிவு துவங்கியுள்ளது. நடப்பு
கல்வியாண்டில், கல்வி நிறுவனங்களில் மேல்படிப்புக்காக சேரும் மாணவ,
மாணவியருக்கு ராகிங் தொல்லைகள் நேர்ந்தால் அல்லது ராகிங் தொடர்பான
புகார்கள் அல்லது தகவலை போலீஸாருக்கு தெரிவிக்கலாம்.அவ்வாறு தெரிவிக்க
விரும்புவோர் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் இயங்கி வரும் ராகிங் தடுப்பு
உதவி மையத்தின் 0424-2250100 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். தகவல் தருவோரின்
விபரங்கள் ரகசியாக வைக்கப்படும், என எஸ்.பி., ஜெயச்சந்திரன்
தெரிவித்துள்ளார்.