ADDED : பிப் 23, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு:காமராஜர் மக்கள் கட்சியினர், ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கார்த்திகேய முத்துக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வேலுசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் ஜோசப் ராஜன் முன்னிலை வகித்தனர்.
மஞ்சள் வாரியத்தின் மண்டல அலுவலகம் ஈரோட்டில் அமைக்க வேண்டும். அந்தியூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற்று தர வேண்டும். பவானிசாகர் அணை, கொடிவேரி அணை, நெரிஞ்சிப்பேட்டை படகு துறையை நவீன சுற்றுலா தலமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாநில பொது செயலாளர் குமரய்யா, ஒருங்கிணைப்பு குழு செயலாளர் தியாகராஜன், துணைத்தலைவர் காளிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

