ADDED : மார் 02, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
கோபி:கோபி போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டராக, 2024 மார்ச், 1ல், காமராஜ் பொறுப்பேற்றார். இந்நிலையில் கடந்த ஜன., மாதத்தில், கோவை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் கடந்த இரு மாதங்களாக, நம்பியூர் இன்ஸ்பெக்டர் ரவி, கோபி இன்ஸ்பெக்டர் பொறுப்பை கூடுதலாக கவனித்தார். இந்நிலையில் கோவை, குனியமுத்துார் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழரசு, கோபி இன்ஸ்பெக்டராக நேற்று மாலை பொறுப்பேற்று கொண்டார்.