/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடும்பத்தை பிரிந்துவாழ்ந்தவர் தற்கொலை
/
குடும்பத்தை பிரிந்துவாழ்ந்தவர் தற்கொலை
ADDED : மார் 18, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடும்பத்தை பிரிந்துவாழ்ந்தவர் தற்கொலை
நம்பியூர்:நம்பியூர் அருகே வேமாண்டம்பாளையம், துலுக்கன் தோட்டத்தை சேர்ந்தவர் பாலுச்சாமி, 57; டிரைவர். இவரது மனைவி வசந்தி. தம்பதியருக்கு, 22 வயதில் மகன், 19 வயதில் மகள் உள்ளனர். கடந்த, 10 ஆண்டுகளாக மனைவியை பிந்து பாலுச்சாமி வாழ்ந்தார். அவர் வசித்த ஓட்டு வீட்டில் நேற்று துர்நாற்றம் வீசியது. புகாரின்படி வரப்பாளையம் போலீசார் சென்று, கதவை உடைத்து பார்த்தனர். அழுகிய நிலையில் துாக்கில் சடலமாக பாலுச்சாமி தொங்கினார். சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

