/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெள்ளித்திருப்பூரில்குடிநீர் கேட்டு மறியல்
/
வெள்ளித்திருப்பூரில்குடிநீர் கேட்டு மறியல்
ADDED : மார் 21, 2025 01:21 AM
வெள்ளித்திருப்பூரில்குடிநீர் கேட்டு மறியல்
அந்தியூர்:வெள்ளித்திருப்பூர் பேரூராட்சி ஒன்பதாவது வார்டு பாரதிநகரில், ௯0க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஆற்று நீரும், போர்வெல் நீரும் வினியோகம் செய்யப்படுகிறது. சில வாரங்களாக குடிநீர் வினியோகம் முறையாக இல்லை.
இதுகுறித்து பஞ்., நிர்வாகத்திடம் மக்கள் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், வெள்ளித்திருப்பூர் கால்நடை மருத்துவமனை எதிரில், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். வெள்ளித்திருப்பூர் போலீசார், பஞ்., சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது. இதையேற்று மக்கள் கலைந்து
சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.