/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அனுமதியற்ற தனியார்பள்ளிகளுக்கு நோட்டீஸ்
/
அனுமதியற்ற தனியார்பள்ளிகளுக்கு நோட்டீஸ்
ADDED : மார் 25, 2025 12:51 AM
அனுமதியற்ற தனியார்பள்ளிகளுக்கு நோட்டீஸ்
ஈரோடு:மாவட்டத்தில் அனுமதி பெறாமல் பள்ளிகள் நடத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில், தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நான்கு மெட்ரிக் பள்ளிகள், 10 பிளே ஸ்கூல்கள் (எல்.கே.ஜி.,- யு.கே.ஜி.,), முறையாக அனுமதி பெறாமல் நடத்துவதாக எழுந்த புகாரில், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு உரிய விளக்கம் அளிக்க அறிவுறுத்தியுள்ளார்.
இதுபற்றி பள்ளி கல்வி துறையினர் கூறியதாவது: இதேபோல் ஏராளமான பிளே ஸ்கூல் அனுமதியின்றி நடத்தப்படுகிறது. இதை பள்ளி கல்வி துறையினர் தனியாக கண்டறிய இயலாது. புகாரின் அடிப்படையில் பள்ளி இருப்பதை கண்டுபிடித்து அனுமதி கடிதத்தை கேட்கிறோம். மெட்ரிக் பள்ளிகள் அனுமதியை பெற்றே பள்ளி நடத்துகின்றனர். இதில் குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒரு முறை தொடர் அனுமதி பள்ளி கல்வி துறையால் வழங்கப்படும். இதை பெறாத நான்கு பள்ளிக்கு மட்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.