ADDED : மார் 28, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுகாதார ஆய்வாளர்கள் தர்ணா
ஈரோடு:தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர், திண்டலில் உள்ள மாவட்ட சுகாதார துணை இயக்குநர் அலுவலகம் முன் நேற்று மாலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர் ராமசாமி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் ஜீவானந்தன், ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முற்றிலும் காலியாக சுகாதார ஆய்வாளர் நிலை--2 பணியிடங்களை உடனடியாக போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும். சுகாதார ஆய்வாளர் நிலை--2ல் 2,715 கூடுதல் பணியிடங்களுக்கு ஒப்புதல் கோரி சுகாதாரத்துறை இயக்குநரால் அனுப்பப்பட்ட கருத்துருக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க நிர்வாகிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.