/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பண்ணாரி கோவிலில்பூக்குழி போடப்பட்டது
/
பண்ணாரி கோவிலில்பூக்குழி போடப்பட்டது
ADDED : ஏப் 03, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ணாரி கோவிலில்பூக்குழி போடப்பட்டது
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அடுத்த, பண்ணாரி அம்மன் கோவிலில் பூக்குழி போடப்பட்டது.பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் விழா கடந்த, 24ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மன் உற்சவம் சப்பரத்துடன் சிக்கரசம்பாளையத்தில் ஆரம்பித்து, சுற்றுவட்டார பகுதிகளில் திருவீதி உலா வந்தது. நேற்று முன்தினம் சப்பரம் திருவீதி உலா முடித்து கோவிலை சேர்ந்தது. நேற்று அதிகாலை பூக்குழி போடப்பட்டது. நேற்று இரவு முதல், தினசரி இரவு மலைவாழ் மக்கள் பாரம்
பரிய இசை கருவிகளை இசைத்து, அம்மன் புகழ் பாடும் களியாட்டம் ஏப்,6.,ம் தேதி வரை நடக்கிறது.

