ADDED : ஏப் 15, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்தில் முதியவர் பலி
கோபி:கோபி அருகே கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் கணேசன், 70, கூலி தொழிலாளி; சத்தி சாலையில், போடிசின்னாம்பாளையத்தில் நேற்று காலை சைக்கிளில் சென்றார். புன்செய் புளியம்பட்டியை சேர்ந்த அன்பு, ஓட்டிவந்த ஹூண்டாய் கார் மோதியதில் கணேசன் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கணேசனின் மனைவி கமலம் புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.