ADDED : ஏப் 15, 2025 02:11 AM
பண்ணாரியில் மறு பூஜை
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா கடந்த, 8ம் தேதி வெகு விமரிசையாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதை தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, சிம்ம வாகனத்தில் புஷ்ப ரத வீதியுலா நடந்தது. இந்நிலையில் நேற்று மறுபூஜை விழா நடந்தது.
நேற்று தமிழ் புத்தாண்டு பிறந்ததால், காலை முதலே பக்தர்கள் வரத்தொடங்கினர். குண்டத்தில் உப்பு, மிளகு துாவி அம்மனை தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் அம்மனுக்கு வேல், கம்பு மிரவணை எடுத்து, அம்மன் உற்சவர் சப்பரத்துடன் கோவிலை சுற்றி வந்தனர். கோவை பகுதியை சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்து ஆடினர்.
மறு பூஜையை ஒட்டி அரசு போக்கு
வரத்து கழகம் சார்பில், நுாற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன.