ADDED : ஏப் 16, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த.வெ.க., கொடியேற்று விழா
அந்தியூர்:வெள்ளித்திருப்பூர் அருகே சென்னம்பட்டி காலனியில், த.வெ.க., சார்பில் கொடிக்கம்பம் அமைத்தல் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தார். அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய நிர்வாகி விஜய் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் செல்வராசு, கொடியேற்றி பெயர் பலகை திறந்து வைத்தார். அந்தியூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகி பூவரசன், பூங்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

