ADDED : ஏப் 23, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு மாவட்ட கூட்டுறவு துறை மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது. கடந்த, 2024-25ல், 100 சதவீதம் கடன் வசூல் செய்த, 45 சங்கங்கள், வங்கிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.
சென்னிமலை, நசியனுார், பி.பெ.அக்ரஹாரம், மொடக்குறிச்சி, ஊஞ்சலுார், கொளத்துப்பாளையம் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், காஞ்சிகோவில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், 10 மாற்றுத்திறனாளி களுக்கு தலா, 50,000 ரூபாய் வீதம், பல்வேறு கடனுதவி வழங்கப்பட்டது.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் கந்தராஜா, துணை பதிவாளர்கள் ரவிசந்திரன், முத்து சிதம்பரம், பிரகாஷ், து.ரவிசந்திரன், அஜித்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.