நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, வீரப்பன்சத்திரம், அபிராமி வீதியை சேர்ந்த பழனிச்சாமி மகள் மாலினி, 21; ஈரோட்டில் ஒரு துணிக்கடையில் விற்பனை பிரிவில் பணியாற்றி வந்தார்.
கடந்த, 9ல் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்தார். மதியம் சம்பளம் வாங்கி வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை அளித்த புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
* ஈரோடு, மாணிக்கம்பாளையம், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சின்னப்பா மகள் சொர்ணாதேவி, 24; தந்தைக்கு தெரிந்த சுதர்ஷினி பராமரிப்பில் ஐந்து மாதமாக இருந்து வந்தார். கடந்த, 8ம் தேதி காலை சுதர்ஷினி பழனி சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்தார். வீட்டில் சொர்ணாதேவி இல்லை. புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.