ADDED : ஜூலை 15, 2026 05:42 AM
பெருந்துறை:பெருந்துறை ரோட்டரி சங்கத்தின், 23வது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. தலைவராக இன்பினிட்டி இன்போ சொலிசன் உரிமையாளர் ரமேஷ், செயலாளராக பரணி ஆயில் மில் உரிமையாளர் நந்தகுமார், பொருளாளராக சித்த மருத்துவர் சக்திவேல் உள்ளிட்டோர் பதவியேற்றனர்.
ரோட்டரி முன்னாள் ஆளுநர் தனசேகரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அக்னி ஸ்டீல் உரிமையாளர் சின்னசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.விழாவை முன்னிட்டு ரோட்டரி சங்கம் சார்பில், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி ரத்த வங்கிக்கான, 29 லட்சம் ரூபாய் மதிப்பு உபகரணம் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்கம் சார்பில், கடந்த ஆண்டு துவங்கப்பட்ட ரத்த வங்கிக்கு, பெருந்துறை வெல்பர் டிரஸ்ட் சார்பில், 25 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.விழாவில் சங்க முன்னாள் தலைவர்கள் அர்சுணன், மருத்துவர்கள் ராஜேந்திரன், சாந்தி ராஜேந்திரன், வக்கீல் சுப்பிரமணியம், கொங்கு பள்ளி தாளாளர் சென்னியப்பன், சி.பி.எஸ்., பிளாஸ்டிக் உரிமையாளர் செந்தில்முருகன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க உடனடி முன்னாள் தலைவர் அம்மன் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
