ADDED : ஆக 08, 2026 05:38 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே பச்சைமலை முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா, சண்முக கலச
சத்ரு சம்ஹார ேஹாமம், 108 சங்காபிஷேகம் நேற்று கோலாகலமாக
நடந்தது.
முன்னதாக காலை 8:30 மணிக்கு, சண்முக கலச சத்ரு சம்ஹார
ேஹாமம் நடந்தது. இதை தொடர்ந்து பச்சைமலை அடிவாரத்தில் உள்ள
பாதவிநாயகர் கோவிலில் இருந்து, 450க்கும் மேற்பட்டோர் பால் குடங்களை
சுமந்து ஊர்வலமாக சென்றனர். அங்கு மதியம், 12:15 மணிக்கு, பாலாபிேஷகம்,
108 சங்காபி ேஷகம் நடந்தது. இதை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேளதாளம் முழங்க
பால்குடம் ஊர்வலம் நடந்ததால், பச்சைமலை முருகன் கோவில் விழாக்கோலம்
பூண்டது.
