/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் தேசிய பேட்மின்டன் போட்டி; ௧௦௦ அணிகள் பங்கேற்பு
/
ஈரோட்டில் தேசிய பேட்மின்டன் போட்டி; ௧௦௦ அணிகள் பங்கேற்பு
ஈரோட்டில் தேசிய பேட்மின்டன் போட்டி; ௧௦௦ அணிகள் பங்கேற்பு
ஈரோட்டில் தேசிய பேட்மின்டன் போட்டி; ௧௦௦ அணிகள் பங்கேற்பு
ADDED : பிப் 15, 2025 05:41 AM
ஈரோடு: ஈரோடு நீல்கிரிஸ் பேட்மின்டன் அகாடமியில், தமிழ்நாடு இற-குபந்து சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட இறகு பந்து சங்கங்-களின் சார்பில் தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டி நேற்று தொடங்கியது. ஈரோடு மாவட்ட இறகு பந்து சங்க தலைவர் செல்லையன் என்ற ராஜா தலைமை வகித்தார். செயலாளர் சுரேந்-திரன் முன்னிலை வைத்தார். எஸ்.கே.எம்., நிறுவன நிர்வாக இயக்குனர் சிவ்குமார் வரவேற்றார். நாக் அவுட் முறையில் இரட்-டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு என 2 பிரிவுகளாக போட்டி நடக்கிறது.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்-சேரி, மத்திய பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட அணிகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று, நாளையும் போட்டி நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு, ரூ.1.20 லட்சம், இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு, ரூ.80 ஆயிரம், பெண்கள் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு, ரூ.70 ஆயிரம், இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு, ரூ.50 ஆயிரமும் பரிசு வழங்கப்படவுள்ளது.

