ADDED : மார் 09, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோட்டில் நேற்று101 டிகிரி வெயில்
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 15 நாட்களுக்கு மேலாக 100 டிகிரி மற்றும் அதனை கடந்து வெயில் வாட்டுகிறது. நேற்று, 38.2 டிகிரி சென்டிகிரேடு அளவுக்கு வெயில் வாட்டியது. இது, 101 டிகிரி பாரன்ஹீட் முதல், 101.8 டிகிரி பாரன்ஹீட் அளவிலான வெப்பத்தை வெளியிட்டதாக உணரப்பட்டது.
பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில், 3.1 முதல், 5 டிகிரி வரை, ஈரோடு மாவட்டத்தில் கூடுதலாக வெயில் வாட்டியதை காண முடிந்தது. குறிப்பாக காற்றில் ஈரப்பதம் இன்றி வெப்பமான நிலையே நீடித்தது. மதியம், 12:00 முதல் மாலை, 4:00 மணி வரை மக்கள் நடமாட்டம் சாலைகளில் குறைந்து காணப்பட்டது.