/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளி வளாகத்தில் 12.6 ஏக்கர் நிலத்தை கையகம் செய்யாத அரசுசிறுபான்மையினர் ஆணைய தலைவர் புது விளக்கம்

ADDED : மார் 21, 2025 01:20 AM
பள்ளி வளாகத்தில் 12.6 ஏக்கர் நிலத்தை கையகம் செய்யாத அரசுசிறுபான்மையினர் ஆணைய தலைவர் புது விளக்கம்
ஈரோடு:மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சொ.ஜோ.அருண் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எஸ்.பி., ஜவகர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு பின் சொ.ஜோ.அருண், நிருபர்களிடம் கூறியதாவது: மாவட்ட வாரியாக சென்று முஸ்லிம், கிறிஸ்தவர் உட்பட சிறுபான்மையினர் நலன், பாதுகாப்பு, கோரிக்கை குறித்து ஆய்வு கூட்டம் நடத்துகிறோம். அவர்களது உரிமை சரியாக சென்றடைகிறதா என ஆய்வு செய்கிறோம். டிச., 25க்குள் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து முடிப்போம். இது, 14வது மாவட்டம். இதுவரையிலான கூட்டத்தில், 489க்கும் மேற்பட்ட கோரிக்கை மனு பெறப்பட்டு, 302க்கும் மேற்பட்ட மனுவுக்கு தீர்வு கண்டுள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுபான்மை நல அலுவலர் நியமிக்க கேட்டுள்ளோம். இதன்படி ஐந்து மாவட்டத்துக்கு நியமித்துள்ளனர்.
அனைத்து மாவட்டத்திலும் கல்லறை தோட்டம், கபர்ஸ்தான் அமைப்பதற்கான நிலம், நிலத்தின் பட்டா கையகப்படுத்தினாலும் பாதுகாப்பின்மை உள்ளது. இவ்வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
பள்ளிவாசல் கட்ட, அவர்களே நிலத்துடன் பட்டா வைத்திருந்தால் என்.ஓ.சி., வழங்க தாமதம் கூடாது என அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். ஈரோடு மாவட்டத்தில்
உலமாக்களுக்கு, 99 அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடுத்து விண்ணப்பித்ததில், 240 பேருக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு சி.எஸ்.ஐ., பள்ளி வளாக பகுதியில் உள்ள, 12.6 ஏக்கர் நிலம் அரசு நிலம் என தெரிவித்தும், இதுவரை ஏன் அரசு அந்நிலத்தை எடுக்கவில்லை. அதற்கு உரிய பட்டா இல்லை. இதுபற்றி மனு வழங்கியுள்ளனர். இருந்தாலும் சிறுபான்மையினர் மீதுள்ள அக்கறையால் அந்நிலத்தை இன்னும் அரசு எடுக்கவில்லை. அந்நிலத்தை அரசு எடுத்து கொள்ள நீதிமன்றம் கூறியுள்ளது. அடுத்து வேறு ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா என தமிழக முதல்வர் முடிவு எடுப்பார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலனுக்காக, 600 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கியுள்ளனர். எந்த துறைக்கு எவ்வளவு என மானிய கோரிக்கையில் தெரிவிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.