/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளஸ் 2 பொதுத்தேர்வின் போதும் பத்தாம் வகுப்புக்கு பாடம் நடக்கும்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வின் போதும் பத்தாம் வகுப்புக்கு பாடம் நடக்கும்
பிளஸ் 2 பொதுத்தேர்வின் போதும் பத்தாம் வகுப்புக்கு பாடம் நடக்கும்
பிளஸ் 2 பொதுத்தேர்வின் போதும் பத்தாம் வகுப்புக்கு பாடம் நடக்கும்
ADDED : மார் 02, 2025 01:39 AM
பிளஸ் 2 பொதுத்தேர்வின் போதும் பத்தாம் வகுப்புக்கு பாடம் நடக்கும்
ஈரோடு:தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது. பொது தேர்வுக்காக காலை நேரத்தில் விடுமுறை அளிக்கப்படுவதால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 25 நாட்கள் கல்வி கேள்விக்குறியாகும். இதனால் தேர்வு நடக்கும் நாட்களிலும், மாணவர்கள் பள்ளிக்கு வந்து பாடம் பயில பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுபற்றி பள்ளி கல்வித்துறையினர் கூறியதாவது:பொது தேர்வு நடக்கும், 25 நாட்களில், 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வி பாதிப்பதை தவிர்க்கும் வகையில், பொதுத்தேர்வு நடக்கும் நாட்களிலும் மாணவ, மாணவியர் பள்ளிக்கு வர வேண்டும். அவர்களை உதவி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
பொது தேர்வு நடக்கும் பள்ளியில் போதிய இட வசதி இல்லாத பட்சத்தில், அருகிலுள்ள சமுதாய கூடம் அல்லது திருமண மண்டபத்தில் அமர்ந்து கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும். காலை முதல் மதியம் வரை பாடங்களை மாணவர்கள் படிக்க வேண்டும். மதியம் வகுப்பு ஆசிரியர்கள் வந்த பின் பாடம் நடத்துவர். இவ்வாறு கூறினர்.