/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தல் விதிமீறல் புகாரில் போலீசில் 2 வழக்கு பதிவு
/
தேர்தல் விதிமீறல் புகாரில் போலீசில் 2 வழக்கு பதிவு
தேர்தல் விதிமீறல் புகாரில் போலீசில் 2 வழக்கு பதிவு
தேர்தல் விதிமீறல் புகாரில் போலீசில் 2 வழக்கு பதிவு
ADDED : மார் 25, 2024 01:22 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில், அந்தந்த சட்டசபை தொகுதிகளில், தேர்தல்
நிலைக்குழுவினர், ௨௪ மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன தணிக்கையில்
ஈடுபட்டுள்ளனர்.
அந்தியூரில், பர்கூர் சாலையில் நேற்று முன் தினம்
ஒரு காரை நிறுத்த முற்பட்டனர். காரில் இருவர் இருந்தனர். காரை
நிறுத்தாமல் சென்ற நிலையில், இருவரும் டூவீலரில் வந்து
நிலைக்குழுவிடம் மது போதையில் தகராறு செய்தனர். பணியில் இருந்த பெண்
போலீசை தகாத வார்த்தை பேசியுள்ளனர். இதுகுறித்து நிலைக்குழுவினர்
அளித்த புகாரின்படி, அ.புதுப்பாளையத்தை சேர்ந்த நாகராஜ், அந்தியூரை
சேர்ந்த செந்தில்குமார் மீது, அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.
இதேபோல் மக்கள் ஜனநாயக கழக உறுப்பினரான,
சென்னிமலை, மேலப்பாளையம், புது விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த
தேவராஜ், 64; பா.ஜ.,வை வீழ்த்துவோம் என போஸ்டர் ஒட்டியது தொடர்பான
புகாரில், சென்னிமைலை போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.

