/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிப்காட்டில் பூட்டிக்கிடக்கும் 200 தொழிற்கூடங்கள்மராமத்து செய்து பயன்பாட்டுக்கு விட கோரிக்கை

ADDED : மார் 16, 2025 01:55 AM
சிப்காட்டில் பூட்டிக்கிடக்கும் 200 தொழிற்கூடங்கள்மராமத்து செய்து பயன்பாட்டுக்கு விட கோரிக்கை
ஈரோடு:ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களின் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி., மாநில தலைவர் சின்னசாமி, எல்.பி.எப்., மாவட்ட கவுன்சில் செயலர் கோபால் மாவட்ட பொருளாளர் தங்கமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 1996ல், 200 தொழில் கூட கட்டடங்கள், திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் சிட்கோவில், 100 தொழில் கூட கட்டடங்கள், 29 ஆண்டுகளுக்கு முன் கட்டி, தலித் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்காமல் உள்ளது. இக்கட்டட மராமத்து பணிக்கு, 50 கோடி ரூபாய் ஒதுக்கியும் இதுவரை பணி நடக்கவில்லை. மராமத்து செய்து கட்டடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துமவனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் 'ஹவுஸ் கீப்பீங்' பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கி நிரந்தரம் செய்ய வேண்டும்.
சிப்காட் பகுதியில் மாசுபட்ட கழிவு நீரை அகற்றி, சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டும். கழிவு நீரை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.