/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கஸ்டடி விசாரணையில் 21 பவுன் நகை பறிமுதல்
/
கஸ்டடி விசாரணையில் 21 பவுன் நகை பறிமுதல்
ADDED : ஏப் 02, 2025 01:35 AM
கஸ்டடி விசாரணையில் 21 பவுன் நகை பறிமுதல்
ஈரோடு:சென்னை, ரெட்ஹில் பகுதியை சேர்ந்தவர் மணி (எ) தங்கமணி, 25; கடந்த, 2023 ஏப்.,ல் வீரப்பன்சத்திரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், இரு வீடுகளில் நகை, பணம் திருடிய வழக்கில், வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை தேடி வந்த நிலையில், வேறு ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நீதிமன்றம் மூலம் வீரப்பன்சத்திரம் போலீசார் ஏழு நாட்கள் கஸ்டடி எடுத்து விசாரித்தனர். இதில், 21 பவுன் நகை மீட்கப்பட்டது. விசாரணை முடிந்து ஈரோடு முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.