/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
211 டன் தரமற்ற விதை குவியல்விற்பனை செய்ய தடை விதிப்பு
/
211 டன் தரமற்ற விதை குவியல்விற்பனை செய்ய தடை விதிப்பு
211 டன் தரமற்ற விதை குவியல்விற்பனை செய்ய தடை விதிப்பு
211 டன் தரமற்ற விதை குவியல்விற்பனை செய்ய தடை விதிப்பு
ADDED : ஜன 24, 2025 01:21 AM
211 டன் தரமற்ற விதை குவியல்விற்பனை செய்ய தடை விதிப்பு
ஈரோடு: ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி தலைமையில், ஈரோடு, கோபி, பவானி, சத்தி மற்றும் காங்கேயம், தாராபுரத்தில், விதை ஆய்வாளர் அடங்கிய குழு, பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டது.
இதில் விதிமீறல் காணப்பட்ட நெல், மக்காசோளம், வீரிய ரக காய்கறி விதை குவியல்கள், 211 டன் அளவில், 111 விதை குவியல் தரமற்றதாக இருந்தது கண்டறியப்பட்டு, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு, 1.40 கோடி ரூபாய். இது தொடர்பாக விதை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை, 3,203 விதை மாதிரிகள் முளைப்புத்திறன் ஆய்வு பரிசோதனைக்காகவும், 310 இனத்துாய்மை பரிசோதனைக்கும், 109 பருத்தி விதைகள் பிடி பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டு ஆய்வறிக்கை பெறப்
பட்டது. இதில், 53 விதை மாதிரிகள் முளைப்பு திறனில் தேர்ச்சி பெறாததால், 45 விதை விற்பனையாளர் மீது துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு, 8 விதை விற்பனையாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை செய்திக்குறிப்பில், விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி தெரிவித்துள்ளார்.