/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.43.93 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
/
ரூ.43.93 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
ADDED : டிச 25, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, டிச. 25--
ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 757 மூட்டை கொப்பரை தேங்காயை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
முதல் தரம் ஒரு கிலோ, 132.69 ரூபாய் முதல், 145.09 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 96.89 ரூபாய் முதல், 130.99 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 35,295 கிலோ கொப்பரை, 43 லட்சத்து, 93,934 ரூபாய்க்கு விற்றது.