ADDED : ஏப் 11, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவிலில் சூதாடிய 5 பேர் கைது
காங்கேயம்:வெள்ளகோவில் பகுதியில் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி, வெள்ளகோவில் நகர பகுதியில், போலீசார் ரோந்து சென்றனர். அப்போது திருவள்ளூர் நகர் பகுதியில் சூதாடிய கும்பலை சுற்றி வளைத்தனர். புதுப்பை வெங்கடாசலம், 50, திருப்பூர் கிருஷ்ணமூர்த்தி, 52, வெள்ளகோவில் மனோகரன்,65, கண்ணுசாமி, 58, ஆறுமுகம், 78, என ஐந்து பேரை கைது செய்து, ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

