/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூரில் மாணவர்கள் ஓட்டிய 5 பைக் பறிமுதல்
/
அந்தியூரில் மாணவர்கள் ஓட்டிய 5 பைக் பறிமுதல்
ADDED : ஜூலை 06, 2024 08:41 AM
அந்தியூர் : தமிழகத்தில், 18 வயதுக்கு குறைவான சிறுவர், சிறுமியர் டூவீலர் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், வாகனம் பறிமுதல் செய்து, அபராதம் விதிப்ப-துடன், அவர்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
இந்த வகையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரில், போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்-குவரத்து ஆய்வாளர் குழு, 18 வயதுக்கும் குறை-வானோர் டூவீலர் ஓட்டுகின்றனரா என்பது குறித்து அவ்வப்போது சோதனையில் ஈடுபடு-கின்றனர்.
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டா-னாவில், பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன், அந்தியூர் போக்குவரத்து இன்ஸ்-பெக்டர் கஸ்துாரி, போலீசார் நேற்று இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பள்ளி சீருடை அணிந்தும், கலர் ஆடை அணிந்தும் டூவீலர் ஓட்டி வந்த ஐந்து மாணவ, மாணவியர் சிக்கினர். வாகனங்களை பறிமுதல் செய்து, அவர்களின் பெற்றோரை வரவழைத்-தனர். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்ட அனுமதிக்க கூடாது. இனி இதுபோல் டூவீலர்-களில் வந்தால் பெற்றோர்களான உங்களுக்-குத்தான் அபராதம் விதிக்கப்படும் என்று எச்ச-ரித்து
அனுப்பினர்.