/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி 66 சதவீதம் நிறைவு
/
மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி 66 சதவீதம் நிறைவு
மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி 66 சதவீதம் நிறைவு
மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி 66 சதவீதம் நிறைவு
ADDED : ஜூலை 04, 2024 07:19 AM
ஈரோடு, : ஈரோடு மாவட்டத்தில், கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி, 66 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
ஈரோடு மாவட்ட, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பழனிவேலு கூறியதாவது:கால்நடைகளை தாக்கும் நோய்களில் கோமாரி நோய், பெரும் பாதிப்பு ஏற்படுத்தும். இதனை தடுக்க கடந்த, 10 முதல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மொத்தம் மூன்று லட்சத்து, 11 ஆயிரத்து, 450 கால்நடைகள் உள்-ளன. இதில் கடந்த, 2 ம் தேதி வரை, இரண்டு லட்சத்து, 8,050 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது, 66 சத-வீதம். வரும், 10க்குள் அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் முகாம்களாகவும், வீடு, வீடாக சென்றும் நிறைவு செய்து வருகிறோம். பர்கூர் மலைப்பகுதியில் பட்டி அமைத்து மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகளுக்கு, தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு கூறினார்.