/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'டாக்டர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலில் மருத்துவமனை உரிமையை ரத்து செய்க'

ADDED : செப் 06, 2024 01:30 AM
ஈரோடு, செப். 6-
ஐ.எம்.ஏ., மாநில தலைவர் அபுல்ஹசன், ஈரோட்டில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. தமிழக அரசு சமீபத்தில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த, துறை ரீதியான சுற்றறிக்கையை வெளியிட்டது.
தேசிய அளவில் இரவு நேரங்களில் பணியாற்றும் இளம் மருத்துவர்கள், பெண் மருத்துவர்கள் உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி வருகிறோம்.
தேசிய மருத்துவ ஆணையம் இந்த விவகாரத்தை முன்னெடுத்து, எந்த மருத்துவமனையில், மருத்துவ கல்லுாரிகளில் மருத்துவர்களின் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதோ, அந்த மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின் உரிமையை ரத்து செய்ய இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கேட்டு கொள்கிறோம். இவ்வாறு கூறினார்.