/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இளைஞர் காங்., சார்பில் ஆலோசனை கூட்டம்
/
இளைஞர் காங்., சார்பில் ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 13, 2024 05:54 AM
ஈரோடு: தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ், ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில், 'இசைஞர் எழுச்சி பயணம்' என்ற தலைப்பில் ஊர்வலம் ஈரோட்டில் நடந்தது.
மாநகர் மாவட்ட இளைஞர் காங்., தலைவர் பிரபு தலைமை வகித்தார். மாநில தலைவர் லெனின் பிரசாத், தேசிய செயலாளர்கள் வைசாக், சாகரிகராவ் பங்கேற்றனர். பி.எஸ்.பார்க்கில் துவங்கிய ஊர்வலம் திருமகன் ஈவெரா சாலை வழியாக பெரியார் மன்றத்தை அடைந்தது.
அங்கு நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஒவ்வொரு சட்டசபை தொகுதியில் உள்ள பூத்களுக்கு தலா, 5 இளைஞர் காங்., நிர்வாகிகளை நியமிப்பது பற்றி ஆலோசித்தனர். சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு மரக்கன்று வழங்கினர். இளைஞர் காங்., மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரிப் அலி, மாநில பொது செயலாளர்கள் ஸ்ரீநிதி, சரவணன், முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, அர்ஷத் உட்பட பலர் பங்கேற்றனர்.