/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
/
கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
ADDED : ஜூலை 12, 2024 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா, நேற்று காலை, 10:30 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து கலச ஸ்தாபனம், யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.
பிறகு உற்சவர் நடராஜ பெருமான், தாயார் சிவகாமி அம்மையாருக்கு, 16 வகை சிறப்பு அபிஷேகம் நடந்து, அலங்காரம் செய்து, பூஜை நடந்தது.
சென்னிமலை முருகன் கோவில் அர்ச்சகரும், ஆதி சைவ அர்ச்சகர்கள் அறக்கட்டளை தவைவருமான மதி சிவாச்சாரியார் தலைமையில் ஸ்தானீகம் சிவசுப்பிரமணிய குருக்கள், பிரபு குருக்கள் பூஜைகளை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.