/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
/
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
ADDED : ஜூன் 13, 2024 07:25 AM
ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர். பின், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
குழந்தைகள், வளரிளம் பருவ தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. 15 முதல், 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்த தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறினால், 20,000 முதல், 50,000 ரூபாய் வரை அபராதம், அல்லது, 6 மாதம் முதல், 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது, 2ம் சேர்த்து விதிக்கப்படும். இரண்டாவது முறையாக சட்ட விதிகள் மீறும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட குழந்தை தொழிலாளரின் பெற்றோருக்கு, 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர்.