நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஆவணி அவிட்டத்தையொட்டி, ஈரோடு காரை வாய்க்காலில் உள்ள சுயம்பு நாகர்கோவிலில், திரளான பக்தர்கள் நேற்று பூணுால் மாற்றி வழிபாடு செய்தனர். இதேபோல் ஈரோடு சவுராஷ்டிரா சபை சார்பில் பூணுால் மாற்றிக் கொள்ளும் விழா, நசியனுார் ரோடு போஸ்டல் நகரில் நடந்தது. விழாவுக்கு சபைத்தலைவர் ராம்குமார் தலைமை வகித்தார்.
* சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் நடந்த ஆவணி அவிட்ட விழாவில், முருகப்பெருமான் மூலவர், உற்சவர், விநாயகர், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பூணுால் அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது. சென்னிமலை ஆதி சைவ அர்ச்சக அறக்கட்டளை சார்பாக அனைத்து மார்க்கண்டேய குல சிவாச்சாரியார் அனைவரும் கைலாசநாதர் கோவிலில் ஒன்று சேர்ந்து சிறப்பு பூஜை நடத்தி பூணுால் மாற்றி அணிவித்தனர்.

