/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாரதியார் நினைவு நாள்: மாணவர்கள் மரியாதை
/
பாரதியார் நினைவு நாள்: மாணவர்கள் மரியாதை
ADDED : செப் 12, 2024 11:41 AM
ஈரோடு: ஈரோட்டில் உள்ள கிளை நுாலகத்தில், பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்-பட்டது.
ஈரோடு கருங்கல்பாளையத்தில், அரசு கிளை நுாலகம் உள்ளது. இங்கு சுதந்திர போராட்ட தியாகியும், கவிஞருமான பாரதியார் கடந்த, 1921 ஜூலை 31ல் நேரடியாக வந்து 'மனிதனுக்கு மரண-மில்லை' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். இது அவ-ரது கடைசி பொது நிகழ்வாக அமைந்தது. அதன் பின் உடல் நலக்குறைவு ஏற்பட்டு செப்.,11ல் இறந்தார். அவரது நினைவு ஆண்டுதோறும் போற்றப்பட்டு வருகிறது. அவ-ரது நினைவு தினமான நேற்று, கிளை நுாலகத்தில் உள்ள அவரது சிலைக்கு நுாலகர் மற்றும் வாசகர் வட்டத்தினர் மாலை அணி-வித்து மரியாதை செலுத்தினர்.பின் பள்ளி மாணவ, மாணவிகள் பாரதியார் சிலைக்கு மலர் துாவி மரியாதை செய்து வணங்கினர். அவர்களுக்கு பாரதியாரின் தேச பக்தி குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மாவட்ட நுாலக இருப்பு சரிபார்ப்பு அலுவலர் ரவிச்சந்திரன், நுாலகர் ஷர்மிளா ஆகியோர் பங்கேற்றனர்.* சென்னிமலை மகாகவி பாரதி சிந்தனை பேரவை சார்பில், நடந்த விழாவுக்கு பேரவை தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆறுமுகம், பொருளாளர் பொன்னு-சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதியார் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பார-தியின் பெருமை குறித்து திருக்குறள் பேரவை தலைவர் திருவள்-ளுவர், தமிழ்சங்க தலைவர் சிவசுப்பிரமணியம், நுகர்வோர் பாது-காப்பு சங்க செயலாளர் கந்தசாமி ஆகியோர் பேசினர், ரவி நன்றி கூறினார்.

