/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் நீர்மட்டம் 88 அடியாக உயர்வு
/
பவானிசாகர் நீர்மட்டம் 88 அடியாக உயர்வு
ADDED : ஜூலை 28, 2024 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலை பகுதி மற்றும் அணை நீர்த்தேக்கத்தை ஒட்டிய வனப்பகுதிகளில், தென்மேற்கு பருவமழை கொட்டுகிறது.
இதனால் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் கோவை மாவட்டம் பில்லுார் அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்-ளது.பவானி ஆற்றில் திறக்கப்படும் நீர் பவானிசாகர் அணைக்கு வந்து சேருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை, 9,648 கன அடியாக இருந்தது. அதேசமயம் அணை நீர்மட்டம், 88.20 அடி, அணை நீர் இருப்பு, 20.4 டி.எம்.சி.,யாக உயர்ந்தது.

