/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அத்திக்கடவு திட்டத்தில் அமைச்சர்கள் 'உதார்' உண்ணாவிரதம் அறிவித்தார் பா.ஜ., அண்ணாமலை
/
அத்திக்கடவு திட்டத்தில் அமைச்சர்கள் 'உதார்' உண்ணாவிரதம் அறிவித்தார் பா.ஜ., அண்ணாமலை
அத்திக்கடவு திட்டத்தில் அமைச்சர்கள் 'உதார்' உண்ணாவிரதம் அறிவித்தார் பா.ஜ., அண்ணாமலை
அத்திக்கடவு திட்டத்தில் அமைச்சர்கள் 'உதார்' உண்ணாவிரதம் அறிவித்தார் பா.ஜ., அண்ணாமலை
ADDED : ஆக 04, 2024 03:48 AM
பெருந்துறை: ''அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, பா.ஜ., சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்படும்,'' என்று, மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சோளிபாளையத்தில், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் மூன்றாவது நீரேற்று நிலை-யத்தை, மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று பார்வை-யிட்டார். திட்டத்தின் தலைமை பொறியாளர் மன்மதனிடம் திட்டம் பற்றி கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களிடம் அண்ணா-மலை கூறியதாவது:
தமிழக முதல்வர், அமைச்சர்கள் துரைமுருகன், முத்துசாமி ஆகியோர், அவினாசி-அத்திக்கடவு திட்டப்பணி, 99 சதவீதம் முடிந்து, சோதனை ஓட்டம் நடந்து வருவதாக கூறி வருகின்றனர். ஆனால், திட்டம் எப்போது பயன்பட்டுக்கு வரும் என்று கேட்டால், பவானி ஆற்றில் உபரி நீர் வரும்போது வரும் என்-கின்றனர். தற்போது பவானி ஆற்றில் உபரி நீர் செல்கிறது. திட்-டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டியது தானே? இன்னும் எத்தனை நாளைக்கும் பரிசோதனை ஓட்டம் என்று கூறுவார்கள். எனவே, அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறை-வேற்ற வலியுறுத்தி, வரும், 20ம் தேதி பா.ஜ., சார்பில், மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்-டுள்ளது. போராட்டம் நடக்கும் இடம், இரண்டு நாளில் அறிவிக்-கப்படும்.
மேகதாது அணை விவகாரத்தில், அமைச்சர் துரைமுருகன் அடிக்கடி அடிக்கும் பல்டியை பார்க்கும்போது, பாரிஸ் ஒலிம்-பிக்கில் கலந்து கொண்டிருந்தால், இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைத்திருக்கும். இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது, தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது தொடர்-பாக நாளை மாலை, ராமநாதபுரம் பகுதி மீனவர் சங்க பிரதிநிதிக-ளுடன், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசவுள்ளேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.