ADDED : செப் 20, 2026 06:57 AM
ஈரோடு:தமிழகம்
முழுவதிலும் ரேஷன் கடைகளில், ரேஷன் கார்டில் உள்ள அனைத்து
உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகை பதிவு அல்லது கண் கருவிழி
பதிவு அல்லது இரண்டையும் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி இ-கே.ஒய்.சி., பதிவு கடந்த ஆக., மாதம், 4 நாட்கள் சிறப்பு முகாம்
நடந்தது. பதிவு செய்யாத நிலையில் நேற்றும் சிறப்பு முகாம் நடந்தது.இதுபற்றி
வட்ட வழங்கல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: குடும்ப
உறுப்பினர்களில் சிலர் வெளியூர், வெளிநாடுகளில் படித்தும், வேலை
செய்தும் வருவதால், 100 சதவீத பதிவை எட்ட இம்முகாம் நடக்கிறது.
குறிப்பாக 'பி.எச்.எச்., - ஏ.ஏ.ஒய்., - பி.எச்.எச்., அன்ட்
என்.பி.எச்.எச்.,' கார்டுதாரர்கள் பதிவு செய்வதற்கான முகாம்
நடத்தப்பட்டது. பதிவு செய்யாத கார்டுதாரர்களுக்கு போனில் அழைப்பு
விடுத்தும் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.
