ADDED : செப் 20, 2026 06:57 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:நாமக்கல்
மாவட்டம் கொக்கராயன்பேட்டை அம்மாசிபாளையத்தை சேர்ந்தவர்
மோகன்ராஜ், 31; லாரி டிரைவரான இவருக்கு மனைவி, மகன்கள் உள்ளனர்.
நண்பர்கள் நான்ரு பேருடன் மது அருந்தி விட்டு பரிசல் துறை காவிரி ஆற்றில்
கடந்த, 18ம் தேதி மாலை குளித்துள்ளார். ஆழமான பகுதிக்கு சென்ற
மோகன்ராஜ் நீரில் மூழ்கி மாயமானார். மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய
வீரர்கள் நீண்ட நேரம் போராடியும் மீட்க முடியாத நிலையில் கரையோரம்
உடல் ஒதுக்கியது. உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர். ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
