/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளி தலைமையாசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வு
/
பள்ளி தலைமையாசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வு
பள்ளி தலைமையாசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வு
பள்ளி தலைமையாசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வு
ADDED : ஜூலை 04, 2024 07:18 AM
ஈரோடு, : நடுநிலை, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, மாவட்ட அளவிலான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஈரோட்டில் நடந்து வருகிறது.
ஈரோடு, பாலசுப்பராயலு வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியில், நேற்று ஈரோடு கல்வி மாவட்ட அளவில் நடுநிலைப்-பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாற்றத்துக்கான கலந்-தாய்வு நடந்தது. மூன்று தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.
இதே போல் ஈரோடு கல்வி மாவட்ட அளவில், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. இரு தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்-தனர். ஒரு தலைமை ஆசிரியருக்கு பணியிட மாறுதல் கிடைத்-தது. இன்று நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்காக, மாவட்ட அளவில் பணியிட மாறுதல் கலந்தாய்வு, பாலசுப்பராயலு வீதியில் உள்ள மாநக-ராட்சி துவக்க பள்ளியில் நடக்கிறது.