/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் வாகனங்களை விரட்டுவதாக புகார்
/
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் வாகனங்களை விரட்டுவதாக புகார்
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் வாகனங்களை விரட்டுவதாக புகார்
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் வாகனங்களை விரட்டுவதாக புகார்
ADDED : செப் 15, 2024 01:07 AM
கொடுமுடி, செப். 1௫-
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், பயணிகளை இறக்கி விட செல்லும் வாகனங்களை நிற்க விடாமல், டிரைவர்கள் விரட்டுவதாக உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழு சார்பில் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கொடுமுடி உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழு செயலாளர் ராஜசுப்ரமணியன், சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதவது:
கொடுமுடி சுற்று வட்டார பகுதி மக்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகள், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்ல, ஈரோடு ரயில் நிலையத்துக்கு வருகின்றனர். இவர்களை இறக்கி விட வரும் கார் உள்ளிட்ட வாகனங்களை ரயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுனர்கள், உங்கள் வாகனங்களை இங்கு நிறுத்தக்கூடாது என்று விரட்டுகின்றனர்.
இதனால் பெண்கள், வயது முதிர்ந்தோர் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படுன்றனர். இதுகுறித்து தாங்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, பயணிகள் வரும் வாகனங்களை நிறுத்தி இறக்கவும், ஏற்றிசெல்லவும் வழிவகை செய்ய வேண்டும்.
இதுகுறித்து புகாரளிக்க போன் நெம்பரை காட்சிப்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.