/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்
/
கோபி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்
கோபி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்
கோபி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்
ADDED : ஆக 08, 2024 01:58 AM
கோபி, கோபி நகராட்சியின், அவசர கூட்டம் சேர்மன் நாகராஜ் (தி.மு.க.,) மற்றும் கமிஷனர் சுபாஷினி ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது கூட்டத்தில் நடந்த கவுன்சிலர்களின் விவாதம் வருமாறு:
தி.மு.க., கவுன்சிலர் குமார சீனிவாஸ்: வணிக வளாக கட்டடத்தை இடித்து கட்ட வேண்டாம் என கூறவில்லை. அதற்கு சிறிது காலம் காத்திருக்கலாம். இரண்டாண்டில் இதுவரை என் வார்டில் சின்டெக்ஸ் தொட்டி கூட வைக்கவில்லை.
அ.தி.மு.க., கவுன்சிலர் பிரினியோ கணேஷ்: மாதம் நான்கு லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும், நகராட்சி வணிக வளாகத்தை இடித்துவிட்டு கட்டினால் மூன்றாண்டுகளாகும். அதனால் நம்பியுள்ளவர்களின் தொழில் பாதிக்கும். எனவே, புதிதாக ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கு வணிக வளாகம் கட்ட வேண்டும். தெருவிளக்கு பராமரிப்பு குறித்து புகார் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட பணியாளர்களின் அணுகுமுறை சரியில்லை.
அ.தி.மு.க., கவுன்சிலர் நாகராஜ்: கீரிப்பள்ள ஓடையில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். மழைக்காலத்தை கருத்தில் கொண்டு, தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
அ.தி.மு.க., கவுன்சிலர் தமிழ்செல்வன்: நகராட்சியில் வரியினங்கள் ஏதாவது குறைக்க வழி வகை செய்ய வேண்டும். எனது வார்டில் சாலை வசதி செய்து தர வேண்டும்.
சேர்மன் நாகராஜ்: வணிக வளாக கட்டடம் பயன்பாட்டுக்கு தகுதியற்றதாக, பொதுப்
பணித்துறை அறிக்கை தந்துள்ளனர். அதை பராமரித்தால் வீண் செலவாகும். இயற்கை சீற்றம் ஏதேனும் நடந்து, வயநாடு போன்று சம்பவம் நடந்தால், வணிக வளாக கட்டடத்துக்கு யார் பொறுப்பேற்க முடியும். கீரிப்பள்ள ஓடையில் தடுப்புச்சுவருக்கான வேலை துவங்கப்படும்.
கமிஷனர் சுபாஷினி: தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து, வரியினங்களை உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலை வசதி செய்து தரப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.