/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓணம் ஆர்டர் நழுவியது தீபாவளி கைகொடுக்குமா
/
ஓணம் ஆர்டர் நழுவியது தீபாவளி கைகொடுக்குமா
ADDED : செப் 16, 2024 03:09 AM
திருப்பூர்: ஓணம் பண்டிகை ஆர்டர் கை நழுவிப்போனாலும், தீபாவளி ஆர்டர் திருப்பூருக்கு கை கொடுக்குமா என, பின்னலாடை உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால், திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களுக்கு, வருடாந்திர வாய்ப்பாக அமைகிறது. ஆண்டுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உள்நாட்டு வர்த்தகம் நடக்கும் நிலையில், பண்டிகை கால ஆர்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெற்றதும், தீபாவளி ஆர்டர் திருப்பூரை நோக்கி பறந்து வரும். அடுத்த, 10 முதல் 15வது நாட்களில் இருந்து, ஆயத்த ஆடை, பின்னலாடைகள், உள்ளாடைகள், அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
வயநாடு நிலச்சரிவால்...
தீபாவளிக்கு முன்னதாக, கேரளாவில் ஓணம் பண்டிகை ஆர்டர் முன்னோட்டமாக இருக்கும். இந்தாண்டு, வயநாடு நிலச்சரிவு காரணமாக, ஓணம் பண்டிகை ஆர்டர்கள் திருப்பூருக்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக, தீபாவளி ஆர்டர் மட்டுமே பிரதானம் என, எதிர்பார்ப்புடன் உற்பத்தியாளர்கள் காத்திருக்கின்றனர்.
அதேசமயம் வடமாநிலங்களில், விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததும், ஆர்டர் கொடுக்க துவங்குவர். அக்., இரண்டாவது வாரத்துக்குள் ஆடைகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் பனியன் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.