/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பேரூராட்சி தலைவரை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா
/
பேரூராட்சி தலைவரை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா
பேரூராட்சி தலைவரை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா
பேரூராட்சி தலைவரை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா
ADDED : ஆக 29, 2024 01:40 AM
சத்தியமங்கலம், ஆக. 29-
சத்தியமங்கலம் அருகே, தி.மு.க., பேரூராட்சி தலைவரை கண்டித்து, இரு கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
சத்தியமங்கலம் அடுத்த, அரியப்பம்பாளையம் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி தலைமை வகித்தார். கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர்கள் சுஜாதா, சத்யபிரியா ஆகியோர், தீர்மானம் குறித்த நோட்டில் கவுன்சிலர்களிடம் கையெழுத்து பெறவில்லை. வரவு செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என, பேரூராட்சி தலைவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு தலைவர், கணக்கு காட்ட முடியாது; என்று கூறி விட்டு சென்றார்.
இதையடுத்து இரு கவுன்சிலர்களும், பேரூராட்சி நுழைவு வாயில் படியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் குமார், கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின், கவுன்சிலர்கள் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர். காலை, 11:00 மணிக்கு ஆரம்பித்த தர்ணா போராட்டம் மதியம் 3:30 மணிக்கு முடிவுக்கு வந்தது.

