ADDED : ஆக 31, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், சந்திப்பு இயக்கம் நேற்று மாலை நடந்தது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ரத்தினம் தலைமை வகித்தார்.
இதில் கோரிக்கைகளை விளக்கி, ஒன்றிய பொது செயலாளர் பத்மா பேசினார். மாவட்ட தலைவர் ஜெயந்தி, காலியாக உள்ள, 59 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்-தினார்.
சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் சுஜாதா, மாரி-யம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.