/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'தரைப்பாலம் விரைவில் கட்டப்படும்' எண்ணமங்கலம் பஞ்., அறிவிப்பு
/
'தரைப்பாலம் விரைவில் கட்டப்படும்' எண்ணமங்கலம் பஞ்., அறிவிப்பு
'தரைப்பாலம் விரைவில் கட்டப்படும்' எண்ணமங்கலம் பஞ்., அறிவிப்பு
'தரைப்பாலம் விரைவில் கட்டப்படும்' எண்ணமங்கலம் பஞ்., அறிவிப்பு
ADDED : ஆக 17, 2024 03:42 AM
அந்தியூர்: பர்கூர் வனப்பகுதி அடிவாரத்தில், எண்ணமங்கலம் அருகே செலம்பூர் அம்மன் கோவில் - செக்போஸ்ட் சாலையில் தரைப்பாலம் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் விரிசல் ஏற்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழையால், தரைப்பாலம் முற்றிலும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் எண்ணமங்கலம் பகுதி மக்கள், குரும்பபாளையம் மேடு அரசு பள்ளி வழியாக, ௩ கி.மீ., துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாலத்தை புதுப்பிக்க எண்ணமங்கலம் பஞ்., சுதந்திர தினவிழா கிராமசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பாலம் விரைவில் புதுப்பிக்கப்படும். இதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். கலெக்டர் ஆய்வுக்குப் பின் டெண்டர் விடப்பட்டு தரைப்பாலம் கட்டப்படும் என பஞ்., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.